Monday, March 28, 2011
Thursday, March 10, 2011
Thursday, March 3, 2011
அரும்பின் குறும்பு!
பேருந்தில் என் பயணம்...
நினைவுகள் பல உந்தித் தள்ள-சின்னக்
கவலைகள் என்னை மெல்லத் தின்ன,
கலக்கத்தை மறைக்கக் கண்மூடி நான்...
நீயோ ,
உன் குறும்புத் தீண்டலில்
என் இறுக்கம் உடைத்து,
கள்ளச் சிரிப்பில்
கவலை துடைத்து,
மயக்கும் விழியால்
மாற்றங்கள் புரிந்து-எனை
மீண்டும் உயிர்த்தெழச் செய்தாய்...
நன்றி ! குறும்பான அரும்பே!
Wednesday, February 23, 2011
என் கேள்விக்கென்ன பதில்!!!
துளித் துளியாய் நீ
வீழும் பேரழகைக்
கண்களிரண்டால் பருகிக்
களித்து நின்றேன்!
சட்டென்று என் மனதில்
ஒரு கேள்வி
கலக்கமுடன் பிறந்ததம்மா...
தீர்த்து வைக்கும்
பெரும்பொறுப்பை உன்னிடத்தில்
தந்து விட்டேன்!!!
மட்ட மாமனிதன்
ப்ளாஸ்டிக் குப்பைகளை
பெரும்பாலும் மண்ணுக்குள்
கொட்டி வைத்தான்.
நீயோ...
விண்ணைத் துளைத்து
பெரும் காற்றில் நுழைந்து
கவியின் கற்பனையில் கலந்து
வீழ்கின்றாய்-அதில்
மண்ணைப் பிளக்கும்
உன் முயற்சி
வெற்றி பெற்றதா? !!!
- தென்றல்
Monday, February 7, 2011
தமிழே ! அருந்தமிழே!
தேனின் சுவையை
நாவில் உணர்த்தும் நற்றமிழ் !
காணும் பொருளை
கவிதையில் வடிக்கும் சொற்றமிழ் !
வாழும் முறையை
வள்ளுவன் காட்டிய செந்தமிழ் !
காதலும் கலவியும்
கற்றுக் கொடுத்த பைந்தமிழ் !
கற்பனை உலகை
கட்டிப் போடும் கவித்தமிழ் !
இயலிசை நாடகம்
போற்றும் நம் அருந்தமிழ் !
-தென்றல்
-தென்றல்
Subscribe to:
Posts (Atom)