Thursday, April 28, 2011

ரசிக்கும் சீமாட்டி நானே!




பயணங்கள் பல நேரம் நம் சிந்தனையைத் தூண்டும்.ஆக தினந்தோறும் பயணிக்கும் நானும் ஒரு சிந்தனாவாதி தானே!
முதலில் இரயில் பயணம்...இப்போது பேருந்து!
என்ன நெரிசல்!

கால் வைக்க இடம் தேடி
ஒற்றைக்காலில் மறுகாலை புதைத்து
நடனமாடும் போதே

பின்புறம் சின்ன உரசல்
மனசுக்குள் வலி!

சிறிதொரு நேரத்தில்
முதுகில் மூச்சுக்காற்று சுட்டுவிட
மூக்குக்குமேல் கோபம் கொப்பளிக்கிறது....

என்னசெய்ய!
என் முறைப்பில்
வெலவெலத்தவரின் நிலையும் பரிதாபம்!

கைகள் கம்பியை இறுக்கிப் பிடிக்க

”அக்கா,உட்காருங்க! நான் இறங்கப் போறேன்”
என்ன ஒரு அமுத வார்த்தைகள்!

அப்பாடா...என ஒரு வழியாய் அமர

ஐயகோ..பின்புறம் அமர்ந்திருந்த அம்மணி
தன் கதை ஊரே அறியும் படி
நவரச வார்த்தைகளில்
கைப்பேசியில் கதைக்க!

என்ன பாவம் செய்தோம் என
ஒருவழியாய் சன்னல் வழி
பார்வையை செலுத்த

கண்ணில் விரியும்
ரசிக்க மறந்த காட்சிகள்...

அடடா............
சிறு குளம்...மலர்ந்த  தாமரைகள்...
வட்டமிடும் வண்ணப்பறவை...
பரந்த நிலம்... நிறம் காட்டும் கட்டிடம்...
சிரிக்கும் பூக்கள்...உதிரும் இலைகள்...
நொடிப்பொழுதில் மாறும் காட்சி...
வருடும் காற்று..அதனூடே கேட்கும் கீதம்.

மனதையும், நினைவையும்
ஒருசேர மயக்கும் நிலை!

ம்ம்ம்ம்ம்.........இப்போது புரிகிறது
நானும் ஒரு ரசிக்கும் சீமாட்டிதான்!!!

Sunday, April 3, 2011

தாலாட்டு...


நன்றி:படம்-கூகுல் இமேஜ்
(பெரிதாக்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும்)