தேனின் சுவையை
நாவில் உணர்த்தும் நற்றமிழ் !
காணும் பொருளை
கவிதையில் வடிக்கும் சொற்றமிழ் !
வாழும் முறையை
வள்ளுவன் காட்டிய செந்தமிழ் !
காதலும் கலவியும்
கற்றுக் கொடுத்த பைந்தமிழ் !
கற்பனை உலகை
கட்டிப் போடும் கவித்தமிழ் !
இயலிசை நாடகம்
போற்றும் நம் அருந்தமிழ் !
-தென்றல்
-தென்றல்
TAMIL, TAMIL, TAMIL,,,,, TYPES OF TAMIL நற்றமிழ் !
ReplyDeleteசொற்றமிழ் !செந்தமிழ் !
பைந்தமிழ் !கவித்தமிழ் !அருந்தமிழ் !
ALL TAMILS ARE THENDRAL's தமிழ்! !! !!
SIVAKUMAR.S.G
THIRUVALLUR.
சார்!
ReplyDeleteதேனிசைத்தமிழ் எனக்கு மட்டும் சொந்தமல்ல!தமிழ் நம் பொது மொழி!அதன் சிறப்பை ,அனைவருக்கும் தெரிந்த விஷயத்தை நான் சொல்ல ஆசைப்பட்டேன்!
இவை அனைத்தையும் சேர்த்து தந்தது தங்களின் முத்தமிழ்
ReplyDeleteநன்றி சரவணன்
ஜேகே
நன்றி ஜேகே!உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு!
ReplyDeleteசெந்தமிழை பற்றி கவி படைத்த அன்பு அக்கா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ....
ReplyDeleteதலைப்பே ஆயிரம் கவி சொல்லுகிறது ...
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா ...
தமிழ்த்தென்றல். (இனி தென்றலையும் தமிழையும் தனியே பிரிக்க முடியாது.)
ReplyDeleteஅரசன் தம்பி,
ReplyDeleteஎவ்வளவு அழகாக பாராட்டமுடியுமோ அவ்வளவு அழகாக பாராட்டியிருக்கிறீர்கள்!
மிக்க நன்றி!
@சத்திரியன்
ReplyDeleteமிக அழகான பெயர்!
உங்களைப் போன்ற கவிஞர்களின் கவிதைகளை பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் வலைதளத்தில் கிடைத்ததின்
தூண்டுதல் தான் நம் தமிழுக்கு பாராட்டாய் அமைந்தது!
நன்றி!
தென்றலில் தமிழ் சலங்கை கட்டி ஆடுதுங்கோ....
ReplyDeleteதென்றல் எனக்கு மிக பிடித்த பெயர்.... எனக்கு மகள் பிறந்தால் தென்றல்தான் பெயர் என நானும் என் இல்லத்தரசியும் முடிவெடுத்திருந்தோம்....
ReplyDeleteமகன் பிறந்ததனால் இளங்கதிர் என பெயர் சூட்டி விட்டோம்.
கவிதை மிக நல்லாயிருக்கு தென்றல்.
தென்றல் எனக்கு மிக பிடித்த பெயர்.... எனக்கு மகள் பிறந்தால் இளந்தென்றல்தான் பெயர் என நானும் என் இல்லத்தரசியும் முடிவெடுத்திருந்தோம்....
ReplyDeleteமகன் பிறந்ததனால் இளங்கதிர் என பெயர் சூட்டி விட்டோம்.
கவிதை மிக நல்லாயிருக்கு தென்றல்.
@ சி.கருணாகரசு
ReplyDeleteமுதலில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் !
தமிழ் தாகம் கொண்ட தந்தை தாயின் தயவால் அழகான பெயர் அமைந்தது என் பாக்கியம்!
தங்களின் துணைவிக்கும் தங்கள் செல்வமகன் இளங்கதிருக்கும் என் வாழ்த்துக்கள்!
கவிகளின் வாழ்த்துக்கள் எனக்கு மேலும் எழுதத் தூண்டுதலாய் இருக்கும்.
நன்றி!
தென்றலின் கவியில் சில்லெனும் வீசும் செந்தமிழ் - அது
ReplyDeleteஎன்றுமே நிலையாய் இனித்திடும் எங்கள் நெஞ்சினில்
@சிவகுமாரன்
ReplyDeleteமிக்க நன்றி!
உங்கள் சிவனைப் பற்றிய பாடல் மிக மிக அருமை!
மீண்டும் நன்றி வாழ்த்துக்களுக்கு!