Wednesday, February 23, 2011

என் கேள்விக்கென்ன பதில்!!!


துளித் துளியாய் நீ
வீழும் பேரழகைக்
கண்களிரண்டால் பருகிக்
களித்து நின்றேன்!

சட்டென்று என் மனதில்
ஒரு கேள்வி
கலக்கமுடன் பிறந்ததம்மா...

தீர்த்து வைக்கும்
பெரும்பொறுப்பை உன்னிடத்தில்
தந்து விட்டேன்!!!

மட்ட மாமனிதன்
ப்ளாஸ்டிக் குப்பைகளை
பெரும்பாலும் மண்ணுக்குள்
கொட்டி வைத்தான்.

நீயோ...
விண்ணைத் துளைத்து
பெரும் காற்றில் நுழைந்து
கவியின் கற்பனையில் கலந்து
வீழ்கின்றாய்-அதில்

மண்ணைப் பிளக்கும்
உன் முயற்சி
வெற்றி பெற்றதா? !!!
                            - தென்றல்

Monday, February 21, 2011

அவள் சிரித்தாள் !


அந்தப் புன்னகையின் விலையைக் கேட்டேன்...


மீண்டும் சிரித்தாள் !


Monday, February 7, 2011

தமிழே ! அருந்தமிழே!

தேனின் சுவையை 
நாவில் உணர்த்தும் நற்றமிழ் !

காணும் பொருளை
கவிதையில் வடிக்கும் சொற்றமிழ் !

வாழும் முறையை
வள்ளுவன் காட்டிய செந்தமிழ் !

காதலும் கலவியும்
கற்றுக் கொடுத்த பைந்தமிழ் !

கற்பனை உலகை 
கட்டிப் போடும் கவித்தமிழ் !

இயலிசை நாடகம்
போற்றும் நம் அருந்தமிழ் !


                                  -தென்றல்