துளித் துளியாய் நீ
வீழும் பேரழகைக்
கண்களிரண்டால் பருகிக்
களித்து நின்றேன்!
சட்டென்று என் மனதில்
ஒரு கேள்வி
கலக்கமுடன் பிறந்ததம்மா...
தீர்த்து வைக்கும்
பெரும்பொறுப்பை உன்னிடத்தில்
தந்து விட்டேன்!!!
மட்ட மாமனிதன்
ப்ளாஸ்டிக் குப்பைகளை
பெரும்பாலும் மண்ணுக்குள்
கொட்டி வைத்தான்.
நீயோ...
விண்ணைத் துளைத்து
பெரும் காற்றில் நுழைந்து
கவியின் கற்பனையில் கலந்து
வீழ்கின்றாய்-அதில்
மண்ணைப் பிளக்கும்
உன் முயற்சி
வெற்றி பெற்றதா? !!!
- தென்றல்
அக்கா வந்துட்டேன்
ReplyDeleteசரியான கேள்விதான் ...
ReplyDeleteஇதை கண்டுகொள்ளும் அளவிற்கு
மூடர்களுக்கு நேரமே இல்லை ..
இதையெல்லாம் தட்டி கேட்கும்
அரசாங்கத்திற்கு போதிய நேரம் போதவில்லை ...
சரியான விழிப்புணர்வு கொடுத்து மக்களை
ReplyDeleteசரியான திசை நோக்கி பயணிக்க வைக்க வேண்டிய அரசாங்கமே
அயர்ந்து தூங்குகிறது ....
நாம் தான் அக்கா கொஞ்சம் கவனமுடன் இருக்க வேண்டும் ..
ReplyDeleteஇந்நிலை நீடித்தால் நிலத்தடி நீர் சீர்கெட்டு
தண்ணீருக்கு கிணறு தோண்டினால் நெகிழி மட்டுமே
கிடைக்கும் ....அபாயம் உருவாகும் ...
நாம் தான் அக்கா கொஞ்சம் கவனமுடன் இருக்க வேண்டும் ..
ReplyDeleteஇந்நிலை நீடித்தால் நிலத்தடி நீர் சீர்கெட்டு
தண்ணீருக்கு கிணறு தோண்டினால் நெகிழி மட்டுமே
கிடைக்கும் ....அபாயம் உருவாகும் ...
ரொம்ப பிடிச்சிருக்கு
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பயணம்
வரணும் தம்பி வரணும்!
ReplyDeleteகவிதை நடையில் உள்ளதா எனத் தெரியவில்லை.ஆனால் நம் எண்ணங்களை வெளியிடும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி!
ReplyDeleteதங்கள் வருகை,உரிமை என் உடன் பிறந்த தம்பிகளுடன் பேசுவது போல் இருக்கிறது.
வாழ்த்துக்கள்!
விழிப்புணர்வை கிளரும் கவிதை.
ReplyDeleteமண்ணைப் பிளாக்கும் மழை.
நாம் தான்
விண்ணைக் கிழிக்கா திருக்க வேண்டும்
கவிதை என்று கூறியதுக்கு நன்றி!
ReplyDeleteநீங்கள் சொல்வதும் சரிதான் நாம் விண்ணையும்ச் சேர்த்துதான் பாழ் படுத்துகிறோம்.
தூய இயற்க்கையை என்ன தான் பாழ்படுத்தினாலும் அதன் அழகு அழியாது இவர்கள் தான் ஓய்ந்து போவார்கள், போகனும்
ReplyDeleteஅழகாய் சொல்லியிருக்கிறீர்கள் நன்றி தென்றல்
ஜேகே
உங்கள் நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் ,ஜேகே!
ReplyDeleteநன்றி!
கவிதை தரமானச் சிந்தனை.... பாராட்டுக்கள்.
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கள் என்னை வழி நடத்தும் .
ReplyDeleteமிக்க நன்றி!
தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருந்தால் வந்து பார்க்கவும்
ReplyDeleteஅன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி
http://blogintamil.blogspot.com/2011/03/2.html
@பாரி தாண்டவமூர்த்தி,
ReplyDeleteவலச்சரத்தில் இந்த வலைப்பூவை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி!
வாருங்கள்!வாழ்த்துங்கள்!