Wednesday, June 8, 2011

தேடல்...


வாழ்க்கையின் போரடிக்கும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை விட்டு  கொஞ்சம் மாறுதல் தேவைதான்!


 நானும் என்னவரும் எங்களுக்காக வாழ்ந்ததை விட என்னவரின் மூலம் கிடைத்த சொந்தத்திற்காக மாய்ந்ததுதான் அதிகம்!

புரிந்து கொள்ளும் உறவுகள் பக்கம் இல்லை;புரியாது  கொல்லும் உறவுகளுக்கு குறைவு இல்லை.

என்ன செய்தாலும் எங்களின் உணர்வுகளைக் கொன்று குளிர்காயும் உறவுகளால் உள்ளம் மட்டுமல்ல உடலின் நலமும் கெட்டது.

அதிகம் விட்டுக்கொடுத்துச் செல்லும் உறவாக மட்டுமே இருப்பதில் பலனில்லை என்பதை உணரும் காலம் வந்தது!

 மனதை உடலை காப்பாற்றிக்கொள்ளும் அவசியம் ஏற்பட்டுள்ளதையும் உணர்ந்தோம்.

வெளியுலகில் கொட்டிக்கிடக்கும் அழகினைப் 

பருகிடத் துணிந்தோம்.

எங்களுக்கு ஜீவன் அளித்த இயற்கையின்

அழகினை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள 

வேண்டி பதிவிட்டுள்ளேன்.

பார்த்து ரசியுங்கள்!


                கொடைக்கானல்.






                                                             
                       மூணார்.




மனிதர்களை விட மேம்பட்ட இயற்கையின் அழகில் உங்களை செலுத்துங்கள்!


வாழ்த்துக்கள்!


(click on the pictures to see the original size.)

24 comments:

  1. வணக்கம் அக்கா ...

    ReplyDelete
  2. இன்றைய உறவுகள் நிறைய இப்படி தான் ஏதோ எதிர்பார்ப்புடன் நெருங்கி பின் நெருப்பாய் பிரிவார்கள்...
    நிறைய மனிதர்கள் இப்படிதான் பல வண்ணங்களில் நடமாடுகின்றன ...

    ReplyDelete
  3. மன வருத்தங்கள் கூடாது அக்கா ..
    இன்று போல் நாளையும் இருக்காது ...
    நாளை மாறும் நிச்சயம் மாறும் ....

    ReplyDelete
  4. உறவுகளால் உங்கள் உள்ளம் வேதனை பட்டிருக்கிறது போல் தோன்றுகிறது
    நானும் என் மனைவியும் கூட உறவுகளால் நிறைய வேதனைபட்டிருக்கிறோம் ஆகவே உங்கள் வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது

    உறவுகளை விடுங்கள் கணவன் எனும் மிக உயர்ந்த உறவு இருக்கையில் அவர் துணையுடன் எதனையும் புறம் தள்ளி வெற்றி கொள்ளலாம் வெற்றி கொள்ள வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  5. படங்கள் அனைத்தும் அழகு எந்த இடம் என்று சொல்லுங்களேன்

    ReplyDelete
  6. இந்த படங்களை எடுத்தது யாரு அக்கா..
    மிக ரசனையுடன் உள்ளது ..
    அதுவும் இரண்டாம் படம் அந்த ஏரி கண்ணை பறிக்கிறது ...

    ReplyDelete
  7. தம்பியின் வார்த்தைகள் எங்கள் இருவருக்குமே இனிமை தரும் ஆறுதலாக உள்ளது.
    நன்றிப்பா!

    ReplyDelete
  8. படங்கள் நாங்கள் இருவரும் ஆங்காங்கே எடுத்தது!
    மனம் நிறைந்த காட்சிகள்!
    நன்றி தங்களின் பாராட்டுக்கு!

    ReplyDelete
  9. r.v.s.,
    உண்மைதான்! உள்ளார்ந்த சொந்தம் ஆட்கொண்டிருக்கும் போது மற்றவர்களை புறம் தள்ள வேண்டியதுதான்(ரொம்ப தாமதமாக புரிந்து கொண்டது)! நன்றி தங்களின் ஆறுதல் தரும் சொற்களுக்கு.

    ReplyDelete
  10. r.v.s.,
    இடங்களின் பெயர்களை எடிட் பண்ணி எழுதி விடுகிறேன்.
    நன்றி!

    ReplyDelete
  11. தென்றல்

    தோழி என்று சொன்னாலும் சொன்னேன் அதற்காக என்னைப்போல் நீங்களுமா அவஸ்தை பட வேண்டும்?
    தூரத்தில் எங்கோ இருந்தாலும் ரண்ம் ஓன்று தான்
    இதை தான்

    விதேசம் விட்டு தேசம் வந்தவன் நான்
    உறவுகள் எனக்கு தெய்வம் போல்
    தெய்வம் நின்று கொல்லும்
    கொல்கிறது

    என்று பதிவித்திருந்தேன்

    ஒரு புறம் நம்மைப்போல் நீங்களும் இருக்குறீர்கள் என்று எண்ணம் ஆறுதல் அளித்தாலும் மனம் என்னமோ வலிக்கிறது
    ஒவ்வொரு முறையும் ரணப்பட்டு மரத்துப்போனாலும்
    ஏமாற்றம் மட்டும் வலிக்க குறைவதேயில்லை

    ஆனாலும் உறவுக்காக நாம் இப்படியே இருப்போக் இல்லையெனில் அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இன்றி போய்விடும்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  12. ஜேகே,
    நீண்ட தங்களின் எழுத்துக்கள் ஆறுதல் தருபவை!வித்தியாசத்தை அவர்கள் உணர வைத்தலும் அவசியமாகிறது!
    எப்படியோ என் மன அழுத்தங்கள் வலைப்பூ அமைத்ததில் இருந்து லேசாகி விட்டது...தங்களைப்போன்ற நல் உள்ளங்களின் வாழ்த்துக்கள்...வார்த்தைகள் ...தொடரட்டும்!
    நன்றி!

    ReplyDelete
  13. நலம் சேர்க்கும் இயற்கை. கொள்ளை அழகு!

    ( உறவுகளின் காயம் மட்டுமல்ல. உயிரின் காயத்தையும் ஆற்றவல்லது-இயற்கை)

    ReplyDelete
  14. சரியாகச் சொன்னீர்கள் சத்ரியன்!இயற்கையின் அழகில் புத்துயிர் பெற்றது மிகவும் உண்மை!

    ReplyDelete
  15. உறவுகள் சில அப்படிதான்....
    உங்களுக்கும் உங்களவருக்கும்.... எது சரியெனப்படுகிறதோ அப்படி சென்றால் குறைந்த பச்சம் மன நிம்மதியாவது கிடைக்கும்

    ReplyDelete
  16. படங்கள் கவிதை பேசுகிறது தோழி.

    ReplyDelete
  17. @கருணாகரசு,
    வரணும்!ரொம்ப நன்றி தங்களின் ஆதரவான வார்த்தைகளுக்கு!
    நேரில் பார்த்தால் மனதை கொள்ளையடிக்கும் இடங்கள்.
    எங்கள் கேமராவில்/ canon IXUS 105 MODEL-ல் எடுத்தது!

    ReplyDelete
  18. நமக்காகவும் வாழ வேண்டும் என என்னும் போது காலம் கடந்து விடுகிறது

    ReplyDelete
  19. உண்மைதான் சிவகுமாரன்!என்ன செய்ய?எஞ்சிய காலமாவது மனதிருப்தியோடு வாழ முடியுமே!

    ReplyDelete
  20. நம்மை நாமாக வைத்திருக்க உதவும் இயற்கை; இறைவன் நமக்கு பரிசளித்த ஒன்று...!
    அழகான படங்கள்!

    ReplyDelete
  21. ப்ரியா, வருகைக்கும் அழகான விளக்கத்திற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  22. photos,kavithai-beautiful! -Rtm

    ReplyDelete
  23. call me if u r free-Rtm

    ReplyDelete