Thursday, April 28, 2011

ரசிக்கும் சீமாட்டி நானே!




பயணங்கள் பல நேரம் நம் சிந்தனையைத் தூண்டும்.ஆக தினந்தோறும் பயணிக்கும் நானும் ஒரு சிந்தனாவாதி தானே!
முதலில் இரயில் பயணம்...இப்போது பேருந்து!
என்ன நெரிசல்!

கால் வைக்க இடம் தேடி
ஒற்றைக்காலில் மறுகாலை புதைத்து
நடனமாடும் போதே

பின்புறம் சின்ன உரசல்
மனசுக்குள் வலி!

சிறிதொரு நேரத்தில்
முதுகில் மூச்சுக்காற்று சுட்டுவிட
மூக்குக்குமேல் கோபம் கொப்பளிக்கிறது....

என்னசெய்ய!
என் முறைப்பில்
வெலவெலத்தவரின் நிலையும் பரிதாபம்!

கைகள் கம்பியை இறுக்கிப் பிடிக்க

”அக்கா,உட்காருங்க! நான் இறங்கப் போறேன்”
என்ன ஒரு அமுத வார்த்தைகள்!

அப்பாடா...என ஒரு வழியாய் அமர

ஐயகோ..பின்புறம் அமர்ந்திருந்த அம்மணி
தன் கதை ஊரே அறியும் படி
நவரச வார்த்தைகளில்
கைப்பேசியில் கதைக்க!

என்ன பாவம் செய்தோம் என
ஒருவழியாய் சன்னல் வழி
பார்வையை செலுத்த

கண்ணில் விரியும்
ரசிக்க மறந்த காட்சிகள்...

அடடா............
சிறு குளம்...மலர்ந்த  தாமரைகள்...
வட்டமிடும் வண்ணப்பறவை...
பரந்த நிலம்... நிறம் காட்டும் கட்டிடம்...
சிரிக்கும் பூக்கள்...உதிரும் இலைகள்...
நொடிப்பொழுதில் மாறும் காட்சி...
வருடும் காற்று..அதனூடே கேட்கும் கீதம்.

மனதையும், நினைவையும்
ஒருசேர மயக்கும் நிலை!

ம்ம்ம்ம்ம்.........இப்போது புரிகிறது
நானும் ஒரு ரசிக்கும் சீமாட்டிதான்!!!

18 comments:

  1. பேருந்தின் இரைச்சல் மற்றும் நெரிசலில் படும் அவஸ்தை யை ஜன்னலில் தெரியும் அழகை சொல்லும் வரிகள் அருமை

    என்றாலும் தலைப்பு சூப்பர் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. r.v.s,மிக்க நன்றி!
    பேருந்தில் செல்லும் போதே தோன்றியவை...எனக்குள், பட்ட அவஸ்தையை... வேடிக்கை பார்த்ததில் மறந்ததை எண்ணி சிரித்துக் கொண்டு சூட்டிக் கொண்ட பட்டம் இந்தத் தலைப்பு!

    ReplyDelete
  3. வணக்கம் அக்கா ...

    ReplyDelete
  4. ஐயகோ..பின்புறம் அமர்ந்திருந்த அம்மணி
    தன் கதை ஊரே அறியும் படி
    நவரச வார்த்தைகளில்
    கைப்பேசியில் கதைக்க!//

    சரியாய் சொன்னீர் ...
    நிறைய நம் மக்கள் இப்படிதான் ...
    அனுபவத்தின் வலியாக இருக்கும் என்றே நினைக்கிறேன் ...

    ReplyDelete
  5. பேருந்தில் பயணம் செய்வது ஏதோ விண்வெளிக்கு சென்று வந்த மாதிரி
    உணர்வையும், களைப்பும் வந்து விடுகிறது ,,,,
    அந்த சன்னலோர காட்சிகள் தான் மனதை சிறகடிக்க வைக்கும்...
    சில நேரங்களில் பழைய நினைவுகள் அசை போடும் போது
    அந்த பயணங்கள் மனதை விட்டு நீங்கா ......

    நன்றி அக்கா ...

    ReplyDelete
  6. வாங்க தம்பி!
    நான் எழுதிய வரிகளைப் பற்றிக் கூறும் போது/வாழ்த்தும் போது என்னுள் வலிமை கூடுகிறது!
    அந்த வகையில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  7. naan migavum rasiththen thendral.

    ReplyDelete
  8. i love the term "kaipesiyil kathaikka".what an apt word!

    ReplyDelete
  9. மனதையும், நினைவையும் மயக்கும் ரசனையான நிமிடங்கள்... ரசித்துப் படித்தேன்!

    ReplyDelete
  10. பேருந்தில் கூட்ட நெரிசலில் பெண்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. உட்கார சீட் கிடக்கும் வரை நரகமாகத் தெரியும் பயணம் , சீட் கிடைத்ததும் சொர்க்கமாகிப் போகிறது. ஏற்கெனவே சன்னலுக்கு வெளியே இருந்த இயற்கை தான், நம் மனதின் நிலையைப் பொறுத்து சொர்க்கமாகவும் நரகமாகவும் மாறுகிறது.
    அருமையான கவிதை சீமாட்டியே .

    ReplyDelete
  11. ரதி,வருக! நீ ரசிக்கும் போது நானே மறுபடியும் ரசித்த எண்ணம் தோன்றுகிறது! நன்றிப்பா!

    ReplyDelete
  12. பிரியா,உங்கள் பதிவுகள் மிகவும் ரசனையானவை. நன்றி தங்கள் வருகைக்கு.!மீண்டும் வருக!

    ReplyDelete
  13. உண்மைதான் சிவகுமாரன்!
    நம் மன நிலையைப்பொறுத்துதான் நம் ரசனையும் அமைகிறது!

    ReplyDelete
  14. பேருந்திலும் , மின்சார ரயிலிலும் பெண்கள் படும் அவஸ்தை.. நன்றாக சொல்லி உள்ளீர்கள்

    ReplyDelete
  15. நன்றி எல் கே.தங்கள் வருகை நல் வருகையாகுக!

    ReplyDelete
  16. தென்றல்

    ரசிக்கும் சீமாட்டி தான் நிங்கள் ரசிக்கவும் வைக்க முடிகிறது உங்களால்

    ஒரு விஷயம் மனதில் பட்டது இத்துனை அழகிய மனதை மயக்கும் காட்சிகள் மிக அருகில் இருந்தும் மனம் அதில் லயிக்காமல் வேண்டாத செயலையும் வேண்டாத தொல்லை பேசி பேச்சையும் கூட காதிலும் மனதிலும் போட்டு கொள்கிறதே இதை என்ன சொல்ல

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  17. ஜேகே,
    வந்துட்டேன்!விடுமுறையை கொண்டாடிய நேரத்தில் கணினியும் காலை வாரி விட்டது!யாருக்கும் பதிலளிக்க முடியாமல் போனது.
    நன்றி தங்களின் பாராட்டுக்கு!

    ReplyDelete