Tuesday, August 9, 2011

அதிகாலை...!!!


அடுப்படி மட்டும்தான் தெரியும்
அஞ்சு மணிக்கு...


வேலை முடிந்து நிமிர 
எட்டு மணி...


பேருந்தை பிடிக்க போராட்டம் ...
ஞாயிறு மட்டும் தூக்கத்தில் கழியும் ...


ஆனால் இன்று என்னவாயிற்று எனக்கு ?!
ஞாயிறு தானே ...
காலை அஞ்சு மணிக்கே தூக்கம் போச்சு ...


மெல்ல பால்கனியில் என் வாசம் ...
ஆகா .... இது என்ன ?!!!


முகம் காட்ட மறுக்கும் 
குயிலின் ஓசை !


முத்துக்களாய் பூத்திருக்கும்
பனித்துளி !


சிட்டுக்குருவியின் 
செல்லச் சண்டைகள் !


மொட்டவிழ்க்கும் 
 ரோஜாக்கள் !


நடை பயிலும்
 பக்கத்து வீட்டுத்தாத்தா !


நர்த்தனமாடும்
பட்டாம்பூச்சிகள் !


அன்பின் பிடியில் துணையைத் துரத்தும்
அணிலின் சாகசம் !


தென்றலில் ஆடும்
தென்னம் ஓலைகள் !


பக்தி நிரப்பும்
”கெளசல்யா சுப்ரஜா....” !


இடம்பெயரும் 
பச்சைக்கிளிகள் !


சிலிர்க்க வைக்கும்
குளிர் காற்று !


அட அடா ...இது தான் அதிகாலையோ !!!


விடுவேனா ...


இனிமேல் அஞ்சு மணிக்கு
 பால்கனி பக்கம் தான் !!!
                                           
                                    -தென்றல்                                                                                                       


16 comments:

  1. அதிகாலை அழகு...அருமையான வரிகளில்...

    ReplyDelete
  2. அருமை... இப்படி எல்லாம் இருக்குமா அதிகாலைல..அதுவும் நகரத்தில்.. கொடுத்து வச்சவங்க தான்...

    ReplyDelete
  3. இயற்கையை இரசிக்கும் அக்காவிற்கு முதல் வணக்கம்....
    இவைகளைனைத்தையும் கிராமத்தில் காணலாம் ...
    நகரத்தில் வாய்ப்புகள் இல்லை .. இப்போ கிராமங்களும் நகரங்களாக உருமாற துடித்து கொண்டிருக்கிறது ...
    நல்ல ரசணைக்கு வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  4. இவைகளைனைத்தும் நாளைய சந்ததிகளுக்கு புத்தகத்தில் படித்து அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் தான் வருமோ என்ற கவலை ஒரு புறம் மனதை
    பிழிகிறது ....

    ReplyDelete
  5. கலாநேசன் ,
    மிக்க நன்றி தங்களின் பாராட்டுக்கு.

    ReplyDelete
  6. truth...,
    இன்னும் நாங்க இருக்கும் இடம் கொஞ்சம் ரசிக்கும் படியா வச்சிருக்காங்க நம்ம மக்கள்...ஏன்னா நாங்க இருக்கிறது அரசு குடியிருப்பு பகுதி...
    நன்றிம்மா ...

    ReplyDelete
  7. அரசன் தம்பி,
    நீங்கள் வேதனைப் படுவது புரிகிறது...என்ன செய்ய!
    என்னால் முடிந்த வரை என் மாணவர்களுக்கு சுற்றுப்புறத்தை/இயற்கையின் அழகை பாதுகாக்க வலியுருத்துகிறேன்.
    காலைப் பொழுதை ரசிக்கவும் கற்றுக் கொடுத்துள்ளேன்.

    ReplyDelete
  8. அதிகாலை அழகை அந்த அற்புதத்தை அருமையாய் வரிகளில் சொல்லியமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. எனக்கும் அதிகாலை எழுந்து இயற்கையை ரசிப்பது மிகவும் இஷ்டம் ஆனால் தூங்கி விடுவதால் எப்பொழுதோ ஒரு நாள் தான் ரசிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது

    ReplyDelete
  10. //அன்பின் பிடியில் துணையைத் துரத்தும்
    அணிலின் சாகசம் !//

    அனைத்து வரிகளும் அழகாய் இருந்தாலும்,
    மேற்குறிப்பிட்டிருக்கும் வரிக்கான காட்சி விரிகிறது மனக்கண்ணில்!

    ReplyDelete
  11. r.v.s.,
    தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!
    உண்மைதான் காலையில் எழுவது என்பது கொஞ்சம் கஷ்டம்தான்...ஆனால் பழக்கப்படுத்தி விட்டால் மிகவும் நல்லது.

    ReplyDelete
  12. சத்ரியன்,
    உங்கள் ரசனை அழகானது!இப்போதெல்லாம் காலைப் பொழுது இத்தகைய காட்சிகள் எனக்கு கிடைக்கிறது!
    நன்றி தங்களுக்கு!

    ReplyDelete
  13. புத்தம் புது காலை பொன்னிற வேளை....கவிதை அருமை காலை அழகினை அனுபவித்தம் உங்கள் பதிவிடன் சேர்த்து...வாழ்த்துக்கள் - வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அதிகாலை வேளையின் அருமைகளை இரவு 12 மணி வரை டிவி பார்த்து தொலைக்கும் நபர்கள் தான் அதிகம்..

    ReplyDelete
  15. மாய உலகம் ! நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்.

    ReplyDelete
  16. suryajeeva ...வருகைக்கும் வாழ்த்துக்கும் முதலில் என் நன்றி!
    உண்மையான கூற்று!

    ReplyDelete