Saturday, July 2, 2011

உங்களால் முடியுமா?

கண்மணி கேட்கிறேன்,
”உங்களால் முடியுமா?”


வளையல் வைத்து வட்டம் போட்டோம்;
கட்டம் கட்டி வீடு சமைத்தோம்.

மறைந்த மன்னன் பாடம் படித்தோம்;
திட்டம் போட்டு அவனுரு வரைந்தோம்.

கருத்துச் சொல்லும் கவிதை புனைந்தோம்;
கட்டுரை என்று கிறுக்கி வைத்தோம்.

கண்கள் விரியக் கதைகள் சொல்வோம்;
கவலைகளின்றிச் சுற்றித் திரிவோம்.

கணினி மூலம் கற்று வைத்தோம்;
கண்டும் கேட்டும் தெரிந்து கொண்டோம்.

காட்டுக்கத்தல் கத்தி வைப்போம்;
ஆசான் வந்தால் அடங்கி நிற்போம்.

தன்னலமில்லை சேர்ந்து உண்போம்;
தட்டு நிறைய வாங்கித் தின்போம்.

சின்னச் சண்டை போட்டுக்கொள்வோம்;
சிரித்துக் கொண்டே மீண்டும் சேர்வோம்.

பள்ளிச் செல்ல ஆர்வம் கொண்டோம்;
படிக்க மட்டும் வேண்டாம் என்போம்.



12 comments:

  1. "முடியுமா.....????";(
    மிக நன்றாக இருக்கிறது!

    ReplyDelete
  2. நன்றி பிரியா...

    ReplyDelete
  3. வணக்கம் அக்கா ...

    ReplyDelete
  4. கண்மணி கேட்டாங்க ...
    ஒத்துக்கொள்கிறேன் இப்போ எங்களால் முடியாது ...
    ஆனால் ஒரு காலத்தில் நாங்கள் செய்து முடித்து விட்டோமே ...
    இப்போ என்ன பண்ணுவிங்க ....

    ReplyDelete
  5. அக்கா யாரு அந்த குட்டி செல்லம் ...
    உங்கள் வரிகளில் எங்களின் பழைய பள்ளி நினைவுகளை
    நினைவில் கொண்டு வந்துவிட்டிர்கள்...
    மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆர்வமாக இருக்கு ...
    உங்க பள்ளியில் என்னை சேர்த்து கொள்வார்களா....???

    ReplyDelete
  6. அக்கா வலைப் பூவின் கட்டமைப்பையும் , அதன் வடிப்பமையும் கொஞ்சம் மாற்றினால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன் ...
    முடிந்தால் மாற்றுங்களேன்....

    ReplyDelete
  7. தம்பி, முதல் வேலையா வலைப்பூவின் கட்டமைப்பை மாத்தியாச்சு.எப்படியிருக்கு!
    குட்டி வாயடி பாப்பா என் அருமைத் தங்கையின் மகள்.
    தம்பி....உங்களுக்கு ரொம்ப ஆசை தான்... உங்களை சேர்க்க மாட்டோம் ஆனா உங்க குழந்தைக்கு இப்பவே ஒரு இடம் சொல்லி வச்சிடறேன்.சரியா?! ஆனா அரசு பள்ளியில சேப்பிங்களா?!
    நன்றி தங்கள் வருகைக்கும் , மேலான கருத்துக்களுக்கும்.

    ReplyDelete
  8. பள்ளி நினைவுகளை நம் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களே தென்றல்

    குழந்தையின் போஸ் அழகு

    ReplyDelete
  9. அழகா இருக்கு குழந்தையும், குழந்தைப் பருவமும்...

    ReplyDelete
  10. நிச்சயமாய் முடியாது அது அவர்களால் மட்டுமே செய்யக் கூடியது
    இதை அழகிய கவிதையாக்குவது கூட அவர்களோடு இணைந்து
    பணியாற்றும் உங்களைப் போன்றவர்களால்தான் முடியும்
    மனங்கவர்ந்த கவிதை தொடர வாழ்த்துக்கள்
    கவிவண்ணம் மட்டும் அல்ல குழந்தைகளின் கைவண்ணமும் அருமை

    ReplyDelete
  11. அக்கா தம்பியின் விண்ணப்பத்தை ஏற்று கட்டமைப்பை மாற்றியமைக்கு மிக்க நன்றிங்க அக்கா ...
    நிச்சயம் நான் எனது குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்ப்பேன்...
    சேர்த்துவிட்ட தகவலையும் உங்களுக்கு தெரிவிக்கிறேன் அக்கா,...
    இதெற்கெல்லாம் சில காலங்கள் ஆகும் ...

    ReplyDelete
  12. கவிதை மிக அழகு.... ”தங்கையின் கவிதையும்” (முதல் படம்) மிக அழகு.

    ReplyDelete