Monday, August 29, 2011
Monday, August 15, 2011
Tuesday, August 9, 2011
அதிகாலை...!!!
அடுப்படி மட்டும்தான் தெரியும்
அஞ்சு மணிக்கு...
வேலை முடிந்து நிமிர
எட்டு மணி...
பேருந்தை பிடிக்க போராட்டம் ...
ஞாயிறு மட்டும் தூக்கத்தில் கழியும் ...
ஆனால் இன்று என்னவாயிற்று எனக்கு ?!
ஞாயிறு தானே ...
காலை அஞ்சு மணிக்கே தூக்கம் போச்சு ...
மெல்ல பால்கனியில் என் வாசம் ...
ஆகா .... இது என்ன ?!!!
முகம் காட்ட மறுக்கும்
குயிலின் ஓசை !
முத்துக்களாய் பூத்திருக்கும்
பனித்துளி !
சிட்டுக்குருவியின்
செல்லச் சண்டைகள் !
மொட்டவிழ்க்கும்
ரோஜாக்கள் !
நடை பயிலும்
பக்கத்து வீட்டுத்தாத்தா !
நர்த்தனமாடும்
பட்டாம்பூச்சிகள் !
அன்பின் பிடியில் துணையைத் துரத்தும்
அணிலின் சாகசம் !
தென்றலில் ஆடும்
தென்னம் ஓலைகள் !
பக்தி நிரப்பும்
”கெளசல்யா சுப்ரஜா....” !
இடம்பெயரும்
பச்சைக்கிளிகள் !
சிலிர்க்க வைக்கும்
குளிர் காற்று !
அட அடா ...இது தான் அதிகாலையோ !!!
விடுவேனா ...
இனிமேல் அஞ்சு மணிக்கு
பால்கனி பக்கம் தான் !!!
-தென்றல்
Subscribe to:
Posts (Atom)