எப்படியிருக்கு எங்க கரும்பலகை?!
Thursday, July 14, 2011
Saturday, July 2, 2011
உங்களால் முடியுமா?
கண்மணி கேட்கிறேன்,
”உங்களால் முடியுமா?”
வளையல் வைத்து வட்டம் போட்டோம்;
கட்டம் கட்டி வீடு சமைத்தோம்.
மறைந்த மன்னன் பாடம் படித்தோம்;
திட்டம் போட்டு அவனுரு வரைந்தோம்.
கருத்துச் சொல்லும் கவிதை புனைந்தோம்;
கட்டுரை என்று கிறுக்கி வைத்தோம்.
கண்கள் விரியக் கதைகள் சொல்வோம்;
கவலைகளின்றிச் சுற்றித் திரிவோம்.
கணினி மூலம் கற்று வைத்தோம்;
கண்டும் கேட்டும் தெரிந்து கொண்டோம்.
காட்டுக்கத்தல் கத்தி வைப்போம்;
ஆசான் வந்தால் அடங்கி நிற்போம்.
தன்னலமில்லை சேர்ந்து உண்போம்;
தட்டு நிறைய வாங்கித் தின்போம்.
சின்னச் சண்டை போட்டுக்கொள்வோம்;
சிரித்துக் கொண்டே மீண்டும் சேர்வோம்.
பள்ளிச் செல்ல ஆர்வம் கொண்டோம்;
படிக்க மட்டும் வேண்டாம் என்போம்.
Friday, June 24, 2011
Friday, June 17, 2011
Wednesday, June 8, 2011
தேடல்...
வாழ்க்கையின் போரடிக்கும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை விட்டு கொஞ்சம் மாறுதல் தேவைதான்!
நானும் என்னவரும் எங்களுக்காக வாழ்ந்ததை விட என்னவரின் மூலம் கிடைத்த சொந்தத்திற்காக மாய்ந்ததுதான் அதிகம்!
புரிந்து கொள்ளும் உறவுகள் பக்கம் இல்லை;புரியாது கொல்லும் உறவுகளுக்கு குறைவு இல்லை.
என்ன செய்தாலும் எங்களின் உணர்வுகளைக் கொன்று குளிர்காயும் உறவுகளால் உள்ளம் மட்டுமல்ல உடலின் நலமும் கெட்டது.
அதிகம் விட்டுக்கொடுத்துச் செல்லும் உறவாக மட்டுமே இருப்பதில் பலனில்லை என்பதை உணரும் காலம் வந்தது!
மனதை / உடலை காப்பாற்றிக்கொள்ளும் அவசியம் ஏற்பட்டுள்ளதையும் உணர்ந்தோம்.
வெளியுலகில் கொட்டிக்கிடக்கும் அழகினைப்
பருகிடத் துணிந்தோம்.
எங்களுக்கு ஜீவன் அளித்த இயற்கையின்
அழகினை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள
வேண்டி பதிவிட்டுள்ளேன்.
பார்த்து ரசியுங்கள்!
கொடைக்கானல்.
கொடைக்கானல்.
மூணார்.
மனிதர்களை விட மேம்பட்ட இயற்கையின் அழகில் உங்களை செலுத்துங்கள்!
வாழ்த்துக்கள்!
(click on the pictures to see the original size.)
வாழ்த்துக்கள்!
(click on the pictures to see the original size.)
Thursday, April 28, 2011
ரசிக்கும் சீமாட்டி நானே!
பயணங்கள் பல நேரம் நம் சிந்தனையைத் தூண்டும்.ஆக தினந்தோறும் பயணிக்கும் நானும் ஒரு சிந்தனாவாதி தானே!
முதலில் இரயில் பயணம்...இப்போது பேருந்து!
என்ன நெரிசல்!
கால் வைக்க இடம் தேடி
ஒற்றைக்காலில் மறுகாலை புதைத்து
நடனமாடும் போதே
பின்புறம் சின்ன உரசல்
மனசுக்குள் வலி!
சிறிதொரு நேரத்தில்
முதுகில் மூச்சுக்காற்று சுட்டுவிட
மூக்குக்குமேல் கோபம் கொப்பளிக்கிறது....
என்னசெய்ய!
என் முறைப்பில்
வெலவெலத்தவரின் நிலையும் பரிதாபம்!
கைகள் கம்பியை இறுக்கிப் பிடிக்க
”அக்கா,உட்காருங்க! நான் இறங்கப் போறேன்”
என்ன ஒரு அமுத வார்த்தைகள்!
அப்பாடா...என ஒரு வழியாய் அமர
ஐயகோ..பின்புறம் அமர்ந்திருந்த அம்மணி
தன் கதை ஊரே அறியும் படி
நவரச வார்த்தைகளில்
கைப்பேசியில் கதைக்க!
என்ன பாவம் செய்தோம் என
ஒருவழியாய் சன்னல் வழி
பார்வையை செலுத்த
கண்ணில் விரியும்
ரசிக்க மறந்த காட்சிகள்...
அடடா............
சிறு குளம்...மலர்ந்த தாமரைகள்...
வட்டமிடும் வண்ணப்பறவை...
பரந்த நிலம்... நிறம் காட்டும் கட்டிடம்...
சிரிக்கும் பூக்கள்...உதிரும் இலைகள்...
நொடிப்பொழுதில் மாறும் காட்சி...
வருடும் காற்று..அதனூடே கேட்கும் கீதம்.
மனதையும், நினைவையும்
ஒருசேர மயக்கும் நிலை!
ம்ம்ம்ம்ம்.........இப்போது புரிகிறது
நானும் ஒரு ரசிக்கும் சீமாட்டிதான்!!!
Friday, April 22, 2011
Subscribe to:
Posts (Atom)





