Sunday, September 4, 2011

ஆசிரியர் தின வாழ்த்துகள்!


எனதருமை ஆசிரிய பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்!

Monday, August 29, 2011

மலர் ....

மார்க்கர் பேனாவை வைத்து நான் வரைந்தது !



Monday, August 15, 2011

சுதந்திர தின விழா-2011

எங்கள் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் வீடியோ காட்சி


Tuesday, August 9, 2011

அதிகாலை...!!!


அடுப்படி மட்டும்தான் தெரியும்
அஞ்சு மணிக்கு...


வேலை முடிந்து நிமிர 
எட்டு மணி...


பேருந்தை பிடிக்க போராட்டம் ...
ஞாயிறு மட்டும் தூக்கத்தில் கழியும் ...


ஆனால் இன்று என்னவாயிற்று எனக்கு ?!
ஞாயிறு தானே ...
காலை அஞ்சு மணிக்கே தூக்கம் போச்சு ...


மெல்ல பால்கனியில் என் வாசம் ...
ஆகா .... இது என்ன ?!!!


முகம் காட்ட மறுக்கும் 
குயிலின் ஓசை !


முத்துக்களாய் பூத்திருக்கும்
பனித்துளி !


சிட்டுக்குருவியின் 
செல்லச் சண்டைகள் !


மொட்டவிழ்க்கும் 
 ரோஜாக்கள் !


நடை பயிலும்
 பக்கத்து வீட்டுத்தாத்தா !


நர்த்தனமாடும்
பட்டாம்பூச்சிகள் !


அன்பின் பிடியில் துணையைத் துரத்தும்
அணிலின் சாகசம் !


தென்றலில் ஆடும்
தென்னம் ஓலைகள் !


பக்தி நிரப்பும்
”கெளசல்யா சுப்ரஜா....” !


இடம்பெயரும் 
பச்சைக்கிளிகள் !


சிலிர்க்க வைக்கும்
குளிர் காற்று !


அட அடா ...இது தான் அதிகாலையோ !!!


விடுவேனா ...


இனிமேல் அஞ்சு மணிக்கு
 பால்கனி பக்கம் தான் !!!
                                           
                                    -தென்றல்                                                                                                       


Thursday, July 14, 2011

சின்னதா ஒரு படம்...






                                     
                                 எப்படியிருக்கு எங்க கரும்பலகை?!

Saturday, July 2, 2011

உங்களால் முடியுமா?

கண்மணி கேட்கிறேன்,
”உங்களால் முடியுமா?”


வளையல் வைத்து வட்டம் போட்டோம்;
கட்டம் கட்டி வீடு சமைத்தோம்.

மறைந்த மன்னன் பாடம் படித்தோம்;
திட்டம் போட்டு அவனுரு வரைந்தோம்.

கருத்துச் சொல்லும் கவிதை புனைந்தோம்;
கட்டுரை என்று கிறுக்கி வைத்தோம்.

கண்கள் விரியக் கதைகள் சொல்வோம்;
கவலைகளின்றிச் சுற்றித் திரிவோம்.

கணினி மூலம் கற்று வைத்தோம்;
கண்டும் கேட்டும் தெரிந்து கொண்டோம்.

காட்டுக்கத்தல் கத்தி வைப்போம்;
ஆசான் வந்தால் அடங்கி நிற்போம்.

தன்னலமில்லை சேர்ந்து உண்போம்;
தட்டு நிறைய வாங்கித் தின்போம்.

சின்னச் சண்டை போட்டுக்கொள்வோம்;
சிரித்துக் கொண்டே மீண்டும் சேர்வோம்.

பள்ளிச் செல்ல ஆர்வம் கொண்டோம்;
படிக்க மட்டும் வேண்டாம் என்போம்.