Wednesday, February 23, 2011

என் கேள்விக்கென்ன பதில்!!!


துளித் துளியாய் நீ
வீழும் பேரழகைக்
கண்களிரண்டால் பருகிக்
களித்து நின்றேன்!

சட்டென்று என் மனதில்
ஒரு கேள்வி
கலக்கமுடன் பிறந்ததம்மா...

தீர்த்து வைக்கும்
பெரும்பொறுப்பை உன்னிடத்தில்
தந்து விட்டேன்!!!

மட்ட மாமனிதன்
ப்ளாஸ்டிக் குப்பைகளை
பெரும்பாலும் மண்ணுக்குள்
கொட்டி வைத்தான்.

நீயோ...
விண்ணைத் துளைத்து
பெரும் காற்றில் நுழைந்து
கவியின் கற்பனையில் கலந்து
வீழ்கின்றாய்-அதில்

மண்ணைப் பிளக்கும்
உன் முயற்சி
வெற்றி பெற்றதா? !!!
                            - தென்றல்

Monday, February 21, 2011

அவள் சிரித்தாள் !


அந்தப் புன்னகையின் விலையைக் கேட்டேன்...


மீண்டும் சிரித்தாள் !


Monday, February 7, 2011

தமிழே ! அருந்தமிழே!

தேனின் சுவையை 
நாவில் உணர்த்தும் நற்றமிழ் !

காணும் பொருளை
கவிதையில் வடிக்கும் சொற்றமிழ் !

வாழும் முறையை
வள்ளுவன் காட்டிய செந்தமிழ் !

காதலும் கலவியும்
கற்றுக் கொடுத்த பைந்தமிழ் !

கற்பனை உலகை 
கட்டிப் போடும் கவித்தமிழ் !

இயலிசை நாடகம்
போற்றும் நம் அருந்தமிழ் !


                                  -தென்றல்

Sunday, January 30, 2011

திருமண விழா!

நம்  ஊரில் நடைபெறும் பெரும்பாலான திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் இப்போதெல்லாம் அழகான தட்டுக்கள் மணமக்களை ஆரத்தி எடுக்க காத்திருக்கும்!அவைகளில் சில நாம் 
ரசிக்க!









Saturday, January 22, 2011

கோவா போகலாமா?!

   என் சகோதரியின் செல்ல மகன் அன்பு செழியன் கோவாவை சுற்றி காண்பிக்கிறான்.போகலாமா?! 
                          என்ன கிளம்பீட்டீங்களா?...

                                 இருங்க இருங்க ...இவங்கள மாதிரி 
                              விழுந்துடுவீங்க...பாத்து...

                    நம்மல மாதிரி தெளிவா நிக்கனும்ல........
                 எவ்வளவு அழகா இருக்குல்ல நம்ம பீச்...
                                                    முழுசா பாருங்க.........
                                               நல்லா இருக்கில்ல?!!!!
       ம்ம்ம்............ மறுபடியும் எப்ப வருவோமோ..........
    இப்படி மணல்ல விளையாடுவோமோ......தெரியல!!!!!!!
             உங்களுக்குத் தெரியுமா?...அங்கே  நடைபெற்ற சித்திரம் வரையும் போட்டியில யாருக்கு வெற்றி !
                      ஐய்யாவுக்குத்தான்!!!!!!!!!!!

Tuesday, January 18, 2011

அறிவியல் மீது மிக்க காதல் கொண்டுள்ள நம் இளைய தலைமுறை செல்வங்களுக்கு மிகவும் 
நல்ல, பயனுள்ள வலை தளம் ...





Saturday, January 15, 2011

பொங்கல் விழா!

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


மனதின் இனிய எண்ணங்கள்
பொங்கட்டும்!
வாழ்வின் வேண்டும் வளங்கள்
பெருகட்டும்!
வாழ்த்திய நெஞ்சங்கள் மனம்
நிறையட்டும்!
வையகம் உழவில் நன்கு
செழிக்கட்டும்!
                      -தென்றல்